கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று தனது குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார். இருப்பினும் இன்றும் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார் சச்சின். இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், அர்ஜுன் மற்றும் சாரா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மகள் சாரா இன்புளுயென்சராக இருந்து வருகிறார். மறுபுறம் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். சச்சினை போலவே கிரிக்கெட்டில் பிரபலமான ஒருவராக அர்ஜுன் டெண்டுல்கர் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் ஐபிஎல்-லில் கூட அவரால் விளையாட முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த மூன்று வருடமாக இடம்பெற்று வரும் அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை மொத்தமாக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதில் மொத்தமாக மூன்று விக்கெட்கள் எடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடினார் அர்ஜுன் டெண்டுல்கர். இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடவில்லை.
1999 ஆம் ஆண்டு பிறந்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் இன்னும் சரியான வாய்ப்புகள் அமையாத நிலையில், அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக் என்பவருடன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இவர் அர்ஜுனின் சகோதரி சாராவின் நெருங்கிய நண்பர் என்றும் இதன் மூலம் தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தற்போது திருமணம் வரை சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. சானியா சந்தோக் செல்ல பிராணிகளுக்கு அழகு நிலையங்கள் வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் ஐந்து வித்தியாசம்
சானியா சந்தோக் 1998 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், இவருக்கும் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கிட்டத்தட்ட ஒரு வயது வித்தியாசம் உள்ளது என்றும் தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கருக்கும் அவரது மனைவி அஞ்சலிக்கும் இடையே 5 வயது வித்தியாசம் உள்ளது. சச்சினிற்கு திருமணம் நடைபெற்ற போது இது தொடர்பாக அதிகமான விவாதங்கள் இருந்து வந்தது, காரணம் அந்த காலத்தில் இவ்வளவு பெரிய வயது வித்தியாசத்தில் யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் தனது தந்தையைபோலவே அர்ஜுன் டெண்டுல்கரும் தன்னைவிட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.
Arjun Tendulkar is engaged to Saniya Chandok. pic.twitter.com/WgztsjyYx3
— Vipin Tiwari (@Vipintiwari952) August 13, 2025
அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கை
தற்போது 25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பையில் பிறந்திருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார் அர்ஜுன் டெண்டுல்கர். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காக 19 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் தன்னுடைய முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியிருந்தார் அர்ஜுன் டெண்டுல்கர். இருப்பினும் அவருக்கான சரியான வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு உள்ளார்.
About the Author
RK Spark