திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறிய தெரு நாய், காப்பாற்றச் சென்ற பாட்டி யையும் கடித்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்தவர் அபுதாகிர். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுல்தான்பீவி(26). இவர்களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
சுல்தான் பீவி, தனது தாய் மல்லிகா பீவி(44) மற்றும் குழந்தை அஜ்மல் பாஷாவுடன் மேலகொண்டாழி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுல்தான் பீவி, வீட்டில் தனது குழந்தை அஜ்மல் பாஷாவை பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தார்.