சேட்டன் சாம்சன் செய்த சம்பவம்… உற்றுநோக்கும் பிசிசிஐ – இந்திய அணியில் இடம் உறுதியா?

Sanju Samson: ஆசிய கோப்பை தொடர் (Asia Cup 2025) இன்னும் 15 நாள்களில் தொடங்க இருக்கிறது. செப். 9ஆம் தேதி தொடங்கும் தொடர் வரும் செப். 28ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால், இந்த ஆசிய கோப்பை தொடரும் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங் காங் என மொத்தம் 8 அணிகள் ஆசிய கோப்பை தொடரில் மோத உள்ளன. 8 அணிகளும் தலா இருப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன. இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் தங்களின் ஸ்குவாடை அறிவித்துவிட்டன.

Sanju Samson: சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது? 

இந்திய அணியும் (Team India) கடந்த வாரமே 15 பேர் கொண்ட பிரதான ஸ்குவாடையும், 5 மாற்று வீரர்களையும் அறிவித்துவிட்டது. பிசிசிஐயின் இந்த ஸ்குவாட் அறிவிப்பில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்காதது பெரியளவில் விமர்சிக்கப்பட்டது. அதேநேரத்தில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய இரண்டு ஓபனர்கள் இருக்க மூன்றாவது ஓபனராக சுப்மான் கில்லையும் ஸ்குவாடில் எடுத்து, அவரை துணை கேப்டனாகவும் அறிவித்திருப்பது அதிக கேள்விகளை எழுப்பின. 

சுப்மான் கில் (Shubman Gill) இல்லாத காலகட்டத்தில் இந்திய டி20ஐ அணியின் ஓபனராக வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக மூன்று சதங்களை விளாசினார். அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு வலுவான அஸ்திவாரத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை. தற்போது சுப்மான் கில்லை மீண்டும் அணிக்குள் எடுத்து வந்திருப்பது சஞ்சு சாம்சனின் இடத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. சுப்மான் கில் விளையாடினால் சஞ்சு சாம்சனுக்கு ஏறத்தாழ பிளேயிங் லெவனில் இடமில்லை. நம்பர் 3, நம்பர் 4இல் சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா இருக்கிறார்கள். அதற்கும் கீழே சஞ்சுவை பிசிசிஐ விளையாட வைக்குமா, விளையாடினாலும் அவர் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கிறது. 

Sanju Samson: கேரளா கிரிக்கெட் லீக்

அந்த வகையில் தற்போது கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) விளையாடி வருகிறார். இந்த தொடரில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் (Kochi Blue Tigers) அணியில் சஞ்சு சாம்சன் கேப்டனாக உள்ளார். கொச்சி அணி விளையாடிய முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யாத நிலையில், நேற்று விளையாடிய இரண்டாவது போட்டியில் ஆறாவது இடத்தில் இறங்கி 13 ரன்களை மட்டுமே அடித்தார். அதாவது இதனால் ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் 6வது இடத்திற்கு முயற்சிக்கிறார் என்று பேசப்பட்டது.

Sanju Samson: சஞ்சு சாம்சன் செய்த சம்பவம்

ஆனால், இன்று நடந்த கொல்லம் அணிக்கு எதிரான போட்டியில் கொச்சிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் கொச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் ஓபனிங்கில் இறங்கி 51 பந்துகளில் 17 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 121 ரன்களை குவித்து அசத்தினார்.

Sanju Samson, that was ruthless.#KCLSeason2 #KCL2025 pic.twitter.com/pKDx75vF5R

— Kerala Cricket League (@KCL_t20) August 24, 2025

இவரின் அதிரடியின் காரணமாகவே 237 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொச்சி அணியால் அடிக்க முடிந்தது எனலாம். ஓபனிங்கில் மிரட்டியிருப்பதன் மூலம் சஞ்சு சாம்சன் பிசிசிஐயை திரும்பி பார்க்க வைத்துள்ளார் எனலாம். இருப்பினும், பிசிசிஐ சஞ்சு சாம்சன் விளையாடும் அடுத்தடுத்த போட்டிகளை இன்னும் உற்று நோக்கும் எனலாம். அடுத்து கொச்சி அணி வரும் செவ்வாய் அன்று திருச்சூர் அணியுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.