பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய்க்கு 4ஜி சேவை

BSNL Freedom Plan : பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தனது ஒரு ரூபாய் விலையுள்ள ‘சுதந்திர திட்டத்தை’ மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஆகஸ்ட் 1 அன்று  ஒரு ரூபாய் என்ற பெயரளவிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு இலவசமாக 4G சேவைகளை வழங்குகிறது. முதலில் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல் தொடர்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

இந்த திட்டத்தின் கீழ், புதிய சந்தாதாரர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யலாம். தினமும் 2 GB அதிவேக டேட்டா, தினமும் 100 SMS அனுப்பிக் கொள்ள முடியும். மிக முக்கியமாக, தொலைத்தொடர்புத் துறையின் (DoT) வழிகாட்டுதலின்படி, KYC சரிபார்ப்புடன் இலவச சிம் வழங்கப்படும்.

BSNL நிர்வாக இயக்குநரின் நம்பிக்கை:

BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ. ராபர்ட் ஜே. ரவி கூறுகையில், “BSNL நிறுவனம் சமீபத்தில் ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்தின் கீழ், அதிநவீன 4G மொபைல் நெட்வொர்க்கை நாடு முழுவதும் பயன்படுத்தியுள்ளது. முதல் 30 நாட்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இந்த ‘சுதந்திர திட்டம்’, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எங்கள் 4G நெட்வொர்க்கை அனுபவிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. எங்கள் சேவை தரம், நெட்வொர்க் கவரேஜ் மற்றும் BSNL பிராண்டின் மீதான நம்பிக்கை ஆகியவை இந்த அறிமுகக் காலத்திற்குப் பிறகும் வாடிக்கையாளர்களை எங்களுடன் இணைந்திருக்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தை பெறுவதற்கான வழிமுறைகள்:

உங்களுக்கு இந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால், அருகிலுள்ள BSNL சேவை மையத்திற்கு செல்லவும். செல்லுபடியாகும் KYC ஆவணங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு, BSNL சுதந்திர திட்டத்தை வழங்குமாறு கேளுங்கள். KYC நடைமுறைகளை முடித்து இலவச சிம்மைப் பெற்றுக்கொள்ளவும். சிம்மை மொபைலில் போட்டு, வழிகாட்டுதல்களின்படி ஆக்டிவேஷன் செயல்முறையை முடிக்கவும். சிம் ஆக்டிவேட் ஆன நாளில் இருந்து 30 நாட்களுக்கு இலவச சேவைகளை அனுபவிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, BSNL-ன் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-180-1503 அல்லது bsnl.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

பிஎஸ்என்எல் மற்ற திட்டங்கள்

குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ. 48 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி, 5GB டேட்டா. இது சிம் கார்டின் வேலிடிட்டியை நீட்டிக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல திட்டம்.

ரூ. 107 திட்டம்: 35 நாட்கள் வேலிடிட்டி, 3GB டேட்டா, 200 நிமிடங்கள் வாய்ஸ் கால்ஸ்.

ரூ. 153 திட்டம்: 26 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 SMS.

மீடியம் வேலிடிட்டி திட்டங்கள்

ரூ. 199 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 SMS.

ரூ. 299 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 SMS, மேலும், சில இலவச பொழுதுபோக்கு சேவைகளும் கிடைக்கலாம்.

ரூ. 397 திட்டம்: 150 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா, முதல் 30 நாட்களுக்கு மட்டும். அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 SMS. முதல் 30 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் டேட்டா மற்றும் SMS-ஐப் பயன்படுத்த தனித் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது நீண்ட நாள் வேலிடிட்டிக்கு ஒரு நல்ல தேர்வு.

நீண்ட கால வேலிடிட்டி திட்டங்கள்

ரூ. 699 திட்டம்: 130 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 0.5 GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 SMS.

ரூ. 797 திட்டம்: 300 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா, முதல் 60 நாட்களுக்கு. அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 SMS. இது நீண்ட வேலிடிட்டி விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள திட்டம்.

ரூ. 1,499 திட்டம்: 336 நாட்கள் வேலிடிட்டி, மொத்தமாக 24GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 SMS. இது டேட்டாவை குறைவாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்தது.

ரூ. 1,999 திட்டம்: 365 நாட்கள் வேலிடிட்டி, மொத்தமாக 600GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 SMS.

ரூ. 2,399 திட்டம்: 395 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 SMS.

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.