Flipkart Big Billion Days Sale 2025: தேதி, நேரம், சலுகைகள்…. லீக்கான முக்கிய விஷயங்கள் இதோ

Flipkart Big Billion Days Sale 2025: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு இது அற்புதமான நேரம். மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது அடுத்த சேலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட், தனது தளத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் பற்றிய டீசர்களை வெளியிட்டு வருகிறது.

Add Zee News as a Preferred Source

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025

ஒவ்வொரு ஆண்டையும் போலவே, ஃப்ளிப்கார்ட் சிறந்த கேஜெட்களில் சில சிறந்த தள்ளுபடிகள், கூடுதல் வங்கி சலுகைகள் மற்றும் இன்னும் பல ஆஃபர்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைக்கு, இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் தனது மிகப்பெரிய விற்பனைக்கு ‘கம்மிங் சூன்’ லேபிளைக் காட்டுகிறது. இருப்பினும், இது தொடர்பான கசிவுகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள சில தகவல்களை அளித்துள்ளன.

Flipkart Big Billion Days Sale 2025:: விற்பனை தேதி மற்றும் நேரம்

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை முன்பு ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றியது. வழக்கமாக இது செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் தொடக்க வாரங்கள் வரை தொடரும். அதைக் கருத்தில் கொண்டு, ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனை செப்டம்பர் 30, 2025 வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். 

ஃப்ளிப்கார்ட் விஐபி, பிளஸ் மற்றும் பிளாக் சந்தாதாரர்கள் அதிகாலை 12:00 மணிக்கு விற்பனையை அணுகலாம் என்றும்  வழக்கமான பயனர்கள் மதியம் 12:00 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Flipkart Big Billion Days Sale 2025: சாத்தியமான சலுகைகள் இவைதான்

Flipkart Big Billion Days 2025 இல், iPhone 16 Pro Max, Moto Edge 60 Pro, Samsung Galaxy S24 மற்றும் இன்னும்  பல ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகளை நிச்சயமாகக் காண முடியும் என கூறபடுகின்றது. மேலும் இந்த சலுகைகள் வெறும் போன்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, மாறாக, அவை போன் கவர்கள், கேமராக்களுக்கும் விரிவடையும்.

இது தவிர, கன்சோல், பிளேஸ்டேஷன் 5 ஆகியவையும் விற்பனையில் கணிசமான தள்ளுபடியைப் பெறலாம். இது அவற்றை வாங்க விரும்பும் அனைத்து கேமர்களுக்கும் ஒரு நல்ல செய்தி. அதைத் தவிர, ஸ்மார்ட் டிவிகள், மடிக்கணினிகள், குறிப்பாக MacBook M2 மற்றும் பலவற்றில் தள்ளுபடிகள் இருக்கும் என கூறப்படுகின்றது.

Flipkart Big Billion Days Sale 2025: வங்கி சலுகைகள்

– Flipkart Big Billion Days 2025 இல் அனைத்து வாடிக்கையாளர்களும் Axis Bank மற்றும் ICICI வங்கி அட்டைகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். 

– மேலும், இந்த தளம் நோ காஸ்ட் EMI மற்றும் கவர்ச்சிகரமான பரிமாற்ற விருப்பங்களையும் கொண்டு வர உள்ளது.

– இது ஷாப்பிங் அனுபவத்தை பயனருக்கு மிகவும் வசதியாக மாற்றும்.

About the Author


Sripriya Sambathkumar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.