டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – TVS Ntorq 125 on road price and specs

டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் என்டார்க் 125 ஸ்கூட்டரில் உள்ள என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

TVS Ntorq 125

3 வால்வு பெற்ற 125cc CVTi என்ஜினை பெற்றுள்ள என்டார்க் 125யில் Race XP, Super Squad Edition, Race Edition, Disc Edition மற்றும் XT என 5 விதமான வகைகளில் கிடைக்கின்ற நிலையில் குறிப்பாக ரேஸ்  XP வேரியண்டின் பவர் அதிகபட்சமாக 10.2PS ஆனது ரேஸ் மோடு வெளிப்படுத்துகின்றது.

மற்ற வேரியண்டுகள் பொதுவாக 124.8cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.38Ps @ 7000 rpm-ல் மற்றும் டார்க் 10.5Nm @ 5,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது. ரேஸ் எக்ஸ்பி மாடல் 10.2PS பவர் மற்றும் டார்க் 10.8Nm ஆக உள்ளது.

  • Ntorq 125 Disc – ₹ 96,371
  • Ntorq 125 Race Edition – ₹ 1,00,861
  • Ntorq 125 Super Squad Edition – ₹ 1,02,046
  • Ntorq 125 Race XP – ₹ 1,04,436
  • Ntorq 125 XT – ₹ 1,13,201

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2025 TVS Ntorq 125 on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ntorq 125 Disc – ₹ 1,16,654
  • Ntorq 125 Race Edition – ₹ 1,23,661
  • Ntorq 125 Super Squad Edition – ₹ 1,24,946
  • Ntorq 125 Race XP – ₹ 1,27,636
  • Ntorq 125 XT – ₹ 1,37,810

(All Price On-road Tamil Nadu)

  • Ntorq 125 Disc – ₹ 1,08,654
  • Ntorq 125 Race Edition – ₹ 1,13,601
  • Ntorq 125 Super Squad Edition – ₹ 1,14,896
  • Ntorq 125 Race XP – ₹ 1,15,936
  • Ntorq 125 XT – ₹ 1,24,910

(All Price on-road Pondicherry)


tvs ntorq 125 redtvs ntorq 125 red

5 விதமான வேரியண்டுகளில் சில முக்கிய மாறுபாடுகளுடன் பாடி கிராபிக்ஸ் என பலவற்றை வேறுபடுத்தி வாடிக்கையாளர்களில் குறிப்பாக புதிய தலைமுறையினர், முதல் முறை ஸ்கூட்டர் வாங்கும் இளையோரை கவரும் நிறங்கள் என பலவற்றை பெற்றுள்ளது.

டாப் XT வேரியண்டில் ISS (On / OFF) சுவிட்ச், ஹைபிரிட் LCD/TFT கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக மற்ற வேரியண்டுகளில் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இருந்தாலும் எல்சிடி கிளஸ்ட்டர் உள்ளது.

ரேஸ் XP வேரியண்டில் பவர் மட்டுமல்லாமல் ஸ்போர்ட்டிவ் சிவப்பு நிற வீல் பெற்றதாக அமைந்துள்ளது.

22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியை பெற்று 12 அங்குல வீல் பெற்று 100 / 80-12, பின்புறம் 110 / 80-12 முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

என்டார்க் 125 வாங்கலாமா ?

போட்டியாளர்களில் ஜூம் 125 புதிதாக வந்துள்ள நிலையில் அவெனிஸ் 125, டியோ 125 சந்தையில் சவால் விடுப்பதுடன் யமஹா ரே இசட்ஆர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற என்டார்க் 125 வடிவமைப்பு மற்றும் பெர்ஃபாமென்ஸ் சார்ந்த அமைப்பில் சிறப்பாக உள்ளது.

பல வண்ணங்கள், சூப்பர் ஹீரோ கிராபிக்ஸ் போன்றவை இளையோருக்கான தேர்வாக உள்ள நிலையில், ஆனால் சராசரியாக 40-43 கிமீ மட்டுமே மைலேஜ் கிடைப்பதுடன், சஸ்பென்ஷன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

மிக முக்கியமான ஒன்று டாப் வேரியண்டின் விலையில் கூடுதலாக 6,000 வரை செலவு செய்தால் என்டார்க் 150 வாங்கலாம் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

டிவிஎஸ் என்டார்க் 125 நுட்பவிவரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 x 55.5 mm
Displacement (cc) 124.8 cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 9.38 hp (7.0 Kw) at 7,000 rpm

10.2 hp (6.30 Kw) at 7,000 rpm (Race XP)

அதிகபட்ச டார்க் 9.8Nm @ 5500rpm

10.9Nm @ 5500rpm (Race XP)

எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் காயில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் டேம்பர்ஸ்
பிரேக்
முன்புறம் 220mm டிஸ்க்
பின்புறம் டிரம் 130 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர்  100/80-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/80-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-4Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1861 mm
அகலம் 710 mm
உயரம் 1164 mm
வீல்பேஸ் 1285 mm
இருக்கை உயரம்
கிரவுண்ட் கிளியரண்ஸ் 155 mm
எரிபொருள் கொள்ளளவு 5.8 litres
எடை (Kerb) 109kg  – 111 kg (Disc)

டிவிஎஸ் என்டார்க் 125 நிறங்கள்

ரேஸ் XPயில் கருப்பு, ரேஸ் சிவப்பு, மரைன் நீலம், ரேஸ் வேரியண்டில் நீலம், சிவப்பு, சூப்பர் ஸ்குவாட் எடிசனில் மின்னல் சாம்பல், ஸ்டீல்த் கருப்பு, காம்பாட் நீலம், அமேசிங் சிவப்பு, டிஸ்க் வேரியண்டில் டர்க்கைஸ் நீலம், நார்டோ கிரே, ஹார்லெக்வின் நீலம், XT வேரியண்டில் நியான் ஒற்றை வேரியண்ட் உள்ளது.

2025 TVS Ntorq 125 rivals

125சிசி சந்தையில் குடும்பங்களுக்கான ஸ்கூட்டர்கள் பலவும் உள்ள நிலையில், ஸ்போர்ட்டிவ் சந்தையில் அவெனிஸ் 125, ஜூம் 125, டியோ 125, பர்க்மேன் ஸ்டீரி 125 என பலவற்றறை என்டார்க் 125 எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

Faqs About TVS Ntorq 125

டிவிஎஸ் என்டார்க் 125 என்ஜின் விபரம் ?

என்டார்க்கில் 124.8cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.38Ps @ 7000 rpm-ல் மற்றும் டார்க் 10.5Nm @ 5,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது. ரேஸ் எக்ஸ்பி மாடல் 10.2PS பவர் மற்றும் டார்க் 10.8Nm ஆக உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 15 மைலேஜ் எவ்வளவு ?

டிவிஎஸ் என்டார்க் 125 மைலேஜ் லிட்டருக்கு 40-43 கிமீ வரை வழங்கலாம்.

2025 TVS Ntorq 15 ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

டிவிஎஸ் என்டார்க் 125யின் ஆன்-ரோடு விலை ரூ.1.17 லட்சம் முதல் ரூ.1.37 லட்சம் வரை ஆகும்.

TVS Ntorq 125 Image Gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.