டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் பாதுகாப்புத் தரத்தில் புதிய உச்சத்தை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், பாரத் கிராஷ் டெஸ்ட் (BNCAP) பாதுகாப்பு சோதனையில், டாடா அல்ட்ரோஸ் (Tata Altroz) கார் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என இரண்டு பிரிவுகளிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
Altroz பாதுகாப்பு மதிப்பெண்கள்:
- வயது வந்தோர் பாதுகாப்பு: 32-க்கு 29.65 புள்ளிகள்.
- குழந்தைகள் பாதுகாப்பு: 49-க்கு 44.90 புள்ளிகள்.
விவரங்கள்:
- முன்பக்க மோதல் (Frontal Crash Test): ஓட்டுநரின் தலை, கழுத்து, மார்பு மற்றும் கால்கள் பாதுகாப்பான நிலையில் இருந்தன. உடன் பயணிப்பவரின் பாதுகாப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் வலது கால் முன் எலும்பிற்கு ‘போதுமான’ மதிப்பீடு தரப்பட்டுள்ளது.
- பக்கவாட்டு மோதல் (Side Impact Test): இந்த சோதனையிலும், காரின் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தலை மற்றும் இடுப்புப் பகுதிக்கு சிறந்த பாதுகாப்பு கிடைத்தது.
- குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில், 18 மாத மற்றும் 3 வயது குழந்தைகளின் பாதுகாப்பும் சிறப்பாக உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, டாடா மோட்டார்ஸின் ஹாரியர், சஃபாரி, நெக்ஸான், கர்வ் மற்றும் இவி மாடல்கள் உட்பட ஒன்பது கார்களும் BNCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய சந்தையில் டாடா கார்களின் பாதுகாப்பிற்கு வலுவான சான்றாக அமைகிறது.