இதிலும் கூடவா? சிஎஸ்கே ருதுராஜின் மோசமான நிலை!

இந்திய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். 2021 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் தனது அசத்தலான பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (CSK) கோப்பைகளை வெல்ல உதவியாக இருந்தார். பின்னர் இந்திய அணியிலும் அறிமுகமானார்.

Add Zee News as a Preferred Source

2023ல் கௌகாத்தி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்களை அடித்து ருதுராஜ் கெய்க்வாட் வெறியை பெற்று தந்தார். மேலும் அதே ஆண்டில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அவரது தலைமையில் தங்கப்பதக்கம் வென்று சாதனையை படைத்தது. இப்படி இந்திய அணிக்கு வெற்றியை பெற்ற தந்த ருதுராஜுக்கு கடந்த ஆண்டில் வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் 2025 ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டதால், அவர் முழுமையாக விளையாட முடியவில்லை.

தற்போது காயத்திலிருந்து மீண்ட ருதுராஜ் சமீபத்தில் நடைபெற்ற 2025 துலிப் கோப்பை அரை இறுதியில் மேற்கு மண்டலத்துக்கு எதிராக 184 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் இந்தியா ஏ அணியின் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவால் அவரை அந்த போட்டிகளில் இருந்து வெளியேற்றியது.

மேலும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் ருதுராஜ் தேர்வுக்குழுவால் கழட்டிவிடப்பட்டுள்ளார். இதனை ரசிகர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில், இந்திய ஏ அணியில் கூடவா ருதுராஜ்-க்கு இடமில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், “ருதுராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கௌகாத்தி போட்டியில் சதத்தை அடித்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கேப்டனாக இருந்த ருதுராஜ் தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது. அவரது பெயர் இந்திய அணியில் இல்லாததை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், அவரைப் போல திறமையான வீரரை இந்தியா ஏ அணியிலிருந்து நீக்குவது நியாயமானது அல்ல,” என்று கூறி, இவருக்கு இந்தியா ஏ அணியில் இடம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.