கயானா,
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரோவ்மன் பவல் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இருந்து தலா 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அணிக்கு மகேந்திரசிங் தோனியை கேப்டனாக அவர் நியமித்துள்ளார். இருப்பினும் அந்த அணியில் சூர்யகுமார் யாதவ், பிராவோ, ரெய்னா போன்ற முன்னணி வீரர்களை அவர் தேர்வு செய்யவில்லை.
பவல் தேர்வு செய்த பிளேயிங் லெவன்:
1. கிறிஸ் கெயில்
2. ரோகித் சர்மா
3. விராட் கோலி
4. ஏபி டி வில்லியர்ஸ்
5. மகேந்திரசிங் தோனி (கேப்டன்)
6.கீரன் பொல்லார்டு
7. ஆந்த்ரே ரசல்
8. சுனில் நரைன்
9. ரஷித் கான்
10. ஜஸ்பிரித் பும்ரா
11. லசித் மலிங்கா