ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்கள் முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றுத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி முடிவில் இந்திய அணி வீரர்க்ள் பாகிஸ்தான் அணியினருக்கு கை கொடுக்காமல் வெளியேறிய சம்பவம் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
Add Zee News as a Preferred Source
அதனை தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 17) நடந்த போட்டியில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் முதலில் விளையாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்தது. பேட்டிங்கில் பகார் ஜமான் 50 ரன்களுடன் முன்னணியில் இருந்து விளையாடினார். இப்போட்டியிலும் ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக விளையாடி 29* ரன்கள் குவித்து அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
இதையடுத்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 41 ரன்களில் வெற்றி பெற்றது. அமீரக அணியில் ராகுல் சோப்ரா 35 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானில் ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் ஹரிஷ் ரவூப் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியால், செப்டம்பர் 21 ஆம் தேதி சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி மீண்டும் விளையாட உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா, சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளை வீழ்த்தி, துபாயில் முத்தரப்பு டி20 தொடரை வென்றதை நினைவுபடுத்தி, அடுத்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் வெற்றிக்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, “நாங்கள் வென்றுள்ளோம். ஆனால் மிடில் ஆர்டரில் முன்னேற வேண்டும். நல்ல வேலையை செய்துள்ளோம் என்றாலும் சிறந்த பேட்டிங் வரவில்லை. எப்போதும் 150 ரன்களை அடிக்க தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் 170 ரன்கள் அடிக்க முயற்சிப்போம். சாஹின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சாய்ம் ஆயுப் போட்டியில் நமக்கு ஆதரவாக இருப்பார் என்று நம்புகிறோம். எந்த சவாலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா எதிர்கொள்ள நாம் எல்லாம் செய்துள்ளோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
About the Author
R Balaji