கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இத்தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான அணி ஒரு தோல்வியை கூட அடையாமல் இறுதி போட்டிக்கு முன்னேறி டி20 உலகக் கோப்பை தொடரை வென்று சாம்பியன் ஆனது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்றது.
Add Zee News as a Preferred Source
டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இவர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்திய டி20 அணியில் இளம் வீரர்கள் இடம் பிடித்தனர். சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியை ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
குறிப்பாக தொடக்க அதிரடி வீரராக இந்திய அணியில் திகழ்ந்த ரோகித் சர்மாவின் இடத்தில் இளம் வீரர் அபிஷேக் சர்மா பிடித்தார். இதுவரை அவர் 18 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 33.23 சராசரியுடன் 565 ரன்களை எடுத்துள்ளார். 2 சதம் மற்றும் 2 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோராக 135 ரன்களை விளாசி உள்ளார். பந்து வீச்சிலும் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தி உதவி இருக்கிறார். அதிரடி தொடக்க வீரராக இருந்து ஒரு பகுதி நேர பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் அதிரடியாக சிறப்பாக விளையாடுவதற்கு ரோகித் சர்மா தான் காரணம் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அபிஷேக் சர்மா பந்து வீச்சாளருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என உண்மையில் நினைத்து விளையாடக்கூடியவர். அதன் காரணமாகதான் அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடிகிறது.
ஏற்கனவே டி20-ல் ரோகித் சர்மா பவர்பிளே ஓவர்களில் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை காண்பித்து விட்டார். அவரது வழியை கையில் எடுத்த அபிஷேக் சர்மா, தற்போது அதனை பாணியாகவே மாற்றி இருக்கிறார். டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். அதனை அபிஷேக் சர்மா சிறப்பாக செய்து வருகிறார் என அஜய் ஜடேஜா பாராட்டி உள்ளார்.
About the Author
R Balaji