மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி | Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு உட்பட கூடுதலாக மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.29 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. மஹிந்திராவின் பொலிரோ, நியோ , XUV 3XO, தார், ஸ்கார்பியோ, ஸ்கார்பியோ-N, தார் ராக்ஸ் மற்றும் XUV700 ஆகிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • பொலிரோ, நியோ: இந்த மாடலுக்கு ஜிஎஸ்டி 2.0 ₹1.27 லட்சம் வரை விலை குறைப்பு மற்றும் ₹1.29 லட்சம் கூடுதல் சலுகைகள் சேர்த்து, மொத்தமாக ₹2.56 லட்சம் வரை பலன்கள் கிடைக்கின்றன.
  • XUV 3XO: இந்த புதிய மாடலுக்கு  ஜிஎஸ்டி ₹1.56 லட்சம் விலை குறைப்பு மற்றும் ₹ 90,000 கூடுதல் சலுகைகள் என மொத்தமாக ₹2.46 லட்சம் வரை பலன்கள் உண்டு.
  • XUV700: இந்த பிரீமியம் எஸ்யூவி-க்கு ஜிஎஸ்டி  ₹1.43 லட்சம் விலை குறைப்புடன், ₹81,000 கூடுதல் சலுகைகள் சேர்த்து மொத்தம் ₹2.24 லட்சம் வரை பயன்கள் கிடைக்கும்.
  • ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-N: இந்த இரண்டு மாடல்களுக்கும் ஜிஎஸ்டி 2.0 மூலமாக ₹1 லட்சம் முதல் ₹1.45 லட்சம் வரை விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்த பலன்கள் ₹1.96 லட்சம் மற்றும் ₹2.15 லட்சம் வரை உள்ளன.
  • தார் & தார் ராக்ஸ்: இந்த இரண்டு ஆஃப்-ரோடு வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி 2.0 மூலமாக ₹1.35 லட்சம் மற்றும் ₹1.33 லட்சம் வரை விலை குறைப்பு, கூடுதலாக ரூ.20,000 என முறையே ₹1.55 லட்சம் மற்றும் ₹1.53 லட்சம் ஆகும்.
Models New Ex-Showroom Starting Price (INR Lakh) Reduction in Ex-Showroom Price (Up to INR Lakh) Additional Benefits (Up to INR Lakh) Total Benefits (Up to INR Lakh)
Bolero/Neo 8.79 1.27 1.29 2.56
XUV 3XO 7.28 1.56 0.90 2.46
THAR 10.32 1.35 0.20 1.55
Scorpio Classic 12.98 1.01 0.95 1.96
Scorpio-N 13.20 1.45 0.71 2.15
Thar ROXX 12.25 1.33 0.20 1.53
XUV700 13.19 1.43 0.81 2.24

சலுகைகள் குறிப்பிட்ட மாடல் மற்றும் வேரியண்ட்களைப் பொறுத்து மாறுபடும். மேலும், இந்த பலன்களின் முழுமையான விவரங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.