பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 2 குட் நியூஸ்! மிஸ் பண்ணிடாதீங்க

Tamil Nadu government Announcements: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement Program) அளிக்கப்படவுள்ளது.

Add Zee News as a Preferred Source

பொறியியல் மாணவர்களுக்கு டிரோன் பயிற்சி

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இனணந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement Program) போன்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 

ட்ரோன் தயாரிப்பு கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test & Flying) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 வயது முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட்சென்சார் சோதனை பயிற்சி (Embedded Sensor Testing Program), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement Program) போன்ற பயிற்சிகளுக்கு 18 வயது முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி – 620 001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி

வணிகத்துறைக்கான AR/VR பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வணிகத்துறைக்கான மிகை மெய்மை (Augmented Reality – AR) மற்றும்தோற்றமெய்மை (Virtual Reality – VR) கருவிகளைப் பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி பட்டறை நீலகிரி மாவட்டம் CSI பொறியியல் கல்லூரியில் 2025 செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் AR/VR தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கக் கூடிய வணிக வாய்ப்புகள் குறித்தும் விரிவாக கற்றுக் கொள்ளலாம். 

குறிப்பாக, Retail மற்றும் E-commerce துறை – WhatsApp AR catalogs, நகை/உடை try-on, Real estate comm Interior – Virtual tours, furniture placement services, Gaming L Entertainment – VR arcade centers, mobile AR games, Education – Interactive content, training simulations, Marketing agencies – AR posters, product demos போன்ற சேவைகள் குறித்து பயிற்சிஅளிக்கப்படும். சிறிய அளவில் ரூ.10,000 முதல் 50,000 வரை முதலீடு செய்து, மாதாந்திரம் ரூ.25,000 முதல் 2,00,000 வரை வருமானம் ஈட்டக் கூடிய வணிக வாய்ப்புகள் இப்பயிற்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்படுகின்றன. AR/VR தொழில்நுட்பங்கள் எதிர்காலத்திற்கான கருவிகள் மட்டுமல்ல@ தற்போது MSME துறைக்கு பெரிய வணிக சாதனங்களாகவும் திகழ்கின்றன. குறைந்த முதலீட்டில் புதிய சேவைகளை உருவாக்கி அதிக வாடிக்கையாளர்களை அடைந்து, வருமானத்தை உயர்த்தும் திறனும் இவற்றில் உள்ளது.

இந்தப்பயிற்சியில் பங்கேற்க 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொழில்முனைவோர் தகுதி பெறுவர். பங்கேற்பாளர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் அவசியம். பயிற்சிகட்டணம் ரூ.500, முன்பதிவின் போதே செலுத்தப்படவேண்டும். பங்கேற்பதற்கு முன்பதிவு கட்டாயம். இந்த பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட திட்டமேலாளர் தொலைபேசிஎண்: 9080130299 -ல் தொடர்புகொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.