இந்தியா வெற்றி.. கதறி அழுத பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. வீடியோ!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி முடிவடைந்தது. இறுதி போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டுமே அடித்தது. முதல் 12 ஓவர்களில் 110 ரன்களை அடித்த பாகிஸ்தான் அணி 200 ரன்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 35, 37 ரன்களில் 8 விக்கெட்களை இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் தடுமாறி விக்கெட்களை இழந்தனர். 

Add Zee News as a Preferred Source

இதையடுத்து இந்திய அணி 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இவர்கள் எளிதில் இந்த இலக்கை எட்டிவிடுவார்கள் என எண்ணிய நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினார்கள். நல்ல ஃபார்மில் இருந்த அபிஷேக் சர்மா வந்த வேகத்தில் சென்றுவிட்டார். பின்னர் சூர்யகுமார் யாதவ்,சுப்மன் கில் ஆகியோர் வெளியேறினர். பின்னர் களத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா நிலைத்து ரன்களை சேர்க்க தொடங்கினர். குறிப்பாக திலக் வர்மா அரைசதம் கடந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். 

ஏற்கனவே இத்தொடரில் இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வந்தும் மீண்டும் தோல்வியை சந்தித்தது அவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். 

अब थोड़े आसूं भी निकल गए हैं।
एशिया कप में पाकिस्तान की हार के बाद रो पड़े पूर्व क्रिकेटर मोहम्मद आमिर। pic.twitter.com/xX3hfPnSKW

— Aishwarya Paliwal (@AishPaliwal) September 29, 2025

அந்த வீடியோவில், பேசிய அவர், இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்து விட்டோம். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்து வீசியது நமக்கு மிகவும் நல்லது. ஏனென்றால், இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். பெரிய ரன்களை குவிக்கும்போது அதனை துரத்தும் அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்.

நாம் 113 ரன்கள் எடுத்த போது ஒரு விக்கெட்டைதான் வீழ்த்தி இருந்தோம். ஆனால் எப்படி 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தோம். இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனினும் அந்த ஆடுகளத்தில் 146 ரன்கள் என்பது நல்ல இலக்காக இருந்தது. இந்திய அணியில் திலக் வர்மாவை பாருங்கள். அவரை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். களத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் எந்த ஷாட் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என அழுத படியே தெரிவித்தார். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.