இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தவர் ஷிகர் தவான். இவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் டாப் 3 இடங்களில் விளையாடும் இவர்கள் இந்திய அணியின் முக்கிய தூணாக இருந்தனர். இதில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் ஊள்ளூர் போட்டிகளிலும் சேர்ந்து ரன்களை குவித்து உள்ளனர்.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், விராட் கோலியுடன் ஒருமுறை கடுமையான சண்டை ஏற்பட்டதாக ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார். அவர் இரண்டு சம்பவங்களை இந்த தருணத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது விராட் கோலியுடன் இரண்டு முறை மோதல் ஏற்பட்டதாக குறிப்பிட்டு அது எதனால் என்பதையும் விளக்கி இருக்கிறார் ஷிகர் தவாம்.
இது தொடர்பாக பேசிய ஷிகர் தவான், நானும் விராட் கோலியும் ஒருமுறை சண்டை போட்டுக்கொண்டோ.ம். பயிற்சியின்போது ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தோள்பட்டையில் மோதிக்கொண்டோம். ஒரு நொடி எங்கள் இருவருக்கும் கோபம் வந்தது. இதனால் மெதுவாக கால்பந்து விளையாடுவதை குறைத்துக்கொண்டோம். ஏன்னென்றால், அதை பார்த்து அருகில் இருப்பவர்களுடனும் சண்டையிடக்கூடும் என்பதால் நாங்கள் அப்படி செய்தோம். விளையாட்டை பொறுத்தவரையில் பலரும் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
அதேபோல், தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது, விராட் கோலி என்னை ரன் அவுட் ஆக்கிவிட்டார். அப்போது நான் மிகவும் கோபமடைந்தேன். ஏற்கனவே எனக்கு ஐபிஎல் ஏலமும் சரியாக அமையவில்லை. அப்பை இருக்கையில் என்னை நிருப்பிக்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் என்னை ரன் அவுட் ஆக்கியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்னர் அந்த ரன் அவுட் வேண்டும் என்றே செய்யப்படவில்லை என்பதை நாங்கள் புரிந்துக்கொண்டோம். கிரிக்கெட்டில் இப்படியான மோதல் நடக்கும் என தெரிவித்தார்.
ஷிகர் தவான் ஒரு காலத்தில் இந்திய அணியின் முகவும் முக்கிய வீரராக இருந்தார். விரேந்திர சேவாக், டெண்டுல்கர், கவுதம் கம்பீர் ஆகியோர் இந்திய அணியில் இருந்து சென்ற பிறகு இந்திய அணிக்கு ஒரு சிறந்த தொடக்கம் அமைவதற்கு ஷிகர் தவானின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது, ரோகித் சர்மாவுடன் சேர்ந்து தொடக்கத்தில் நிறைய ரன்களை குவித்துள்ளார்.
ஷிகர் தவான் இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6793 ரன்களை குவித்திருக்கிறார். இதில் 17 சதங்கள் மற்றும் 39 அரை சதங்களும் அடங்கும். 34 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 2315 ரன்கள் விளாசி உள்ளார். மேலும், 68 டி20 போட்டிகளில் விளையாடி 11 அரை சதங்களுடன் 1759 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji