பிஜாப்பூர்,
சத்தீஷ்காரில் அடர்ந்த வன பகுதிகளில் அதிக அளவிலான நக்சலைட்டுகள், பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதும் வழக்கம்.
இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 22 பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசில் இன்று சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 49 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், கங்கலூர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் தனியாக நடந்த மோதல் சம்பவம் ஒன்றில் நக்சலைட்டு ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனால், நடப்பு ஆண்டில் 253 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 410 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். 421 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என பிஜாப்பூர் போலுஸ் சூப்பிரெண்டு ஜிதேந்திரா குமார் யாதவ் கூறினார்.