KL Rahul Century Celebration: இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு (India vs West Indies) இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (அக். 2) தொடங்கியது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
Add Zee News as a Preferred Source
KL Rahul Century Celebration: கேஎல் ராகுல் சதம்
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 218 ரன்களை அடித்துள்ளது. கேப்டன் சுப்மான் கில் 50 ரன்களை அடித்து ஆட்டமிழந்த நிலையில், ஓபனிங் பேட்டர் கேஎல் ராகுல் 190வது பந்தில் சதம் அடித்து மிரட்டி உள்ளார். இதோடு கேஎல் ராகுல் மொத்தம் 20 சர்வதேச சதங்களை அடித்திருக்கிறார்.
KL Rahul Century Celebration: 3,211 நாள்களுக்கு பின் சதம்
டெஸ்ட்டை பொருத்தவரை இது அவருக்கு 11வது சதம். அதேநேரத்தில் உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் அடிக்கும் 2வது சதம் இது. இதற்கு முன், இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் அவர் சதம் அடித்திருந்தார், அந்த போட்டியில் அவர் 199 ரன்களை குவித்திருந்தார். அந்த போட்டியில்தான் கருண் நாயர் 300 ரன்களை அடித்தார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது. சுமார் 3,211 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் கேஎல் ராகுல் ஒரு டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருக்கிறார்.
KL Rahul Century Celebration: குழந்தையை குறிப்பிட்டு கொண்டாடினாரா?
8 ஆண்டுகள் 9 மாதங்கள் 17 நாள்களுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் சதத்தை அடித்த கேஎல் ராகுல், சதம் அடித்ததும் பேட்டை தூக்கிவிட்டு, இரண்டு விரல்களை வாயில் வைத்தபடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் இந்த கொண்டாட்டம் சமீபத்தில் அவருக்கு பிறந்திருக்கும் குழந்தையை குறிப்பிட்டு அவர் கொண்டாடியதாக கூறப்படுகிறது.
KL Rahul Century Celebration: வேறு காரணம் இருக்கா?
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு எவாரா என பெயரிடப்பட்டது. குழந்தையை குறிப்பிட்டுதான் அவர் அப்படி கொண்டாடினார் என ஒரு தரப்பு கூறும் நிலையில், மற்றொரு தரப்பு வேறொன்று கூறுகிறது. அதாவது, உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் பயன்படமாட்டார் என்ற விமர்சித்தவர்களை மௌனமாக்கும் வகையில் அந்த கொண்டாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது.
KL Rahul Century Celebration: கேஎல் ராகுல் ரவுட்
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் ணவு இடைவேளைக்கு பின் இந்தியா பேட்டிங் செய்ய வந்த முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார், அவர் 100 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். களத்தில் துருவ் ஜுரேல், ரவீந்திர ஜேடஜா ஆகியோர் உள்ளனர்.