மும்பை அணியில் இருந்து சூரியகுமார் யாதவ் நீக்கமா? புதிய கேப்டன் யார்?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ரஞ்சி போட்டிகளும் மறுபுறம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் மும்பை ரஞ்சி அணியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெறாதது, அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

சூர்யகுமார் யாதவ் நீக்கமா?

2025-26 ரஞ்சி டிராபி தொடரின் முதல் போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அவர் பிப்ரவரி 2025 முதல் முதல் தர போட்டிகளில் விளையாடாததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன் இந்த ரஞ்சி போட்டி அவருக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை என்று மும்பை கிரிக்கெட் சங்க செயலாளர் அபய் ஹடப் தெளிவுபடுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சூர்யகுமார் யாதவ் நீக்கப்படவில்லை. இந்த போட்டிக்கான அவரது பங்கேற்பு உறுதி செய்யப்படவில்லை. மும்பை கிரிக்கெட் சங்க ஊழியர்கள் அவரை தொடர்புகொண்டு அவரது பங்கேற்பு குறித்து கேட்டபோது, அவரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வரவில்லை,” என்று விளக்கமளித்தார். இதனால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மும்பை அணியில் மற்ற மாற்றங்கள்

சூர்யகுமார் யாதவ் அணியில் இல்லாத போதிலும், மும்பை அணி வலுவாகவே உள்ளது. அஜிங்க்யா ரஹானே கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சிவம் துபே, ரஞ்சி தொடரின் முதல் போட்டியில் விளையாடிவிட்டு ஆஸ்திரேலியா புறப்படுவார். ரஹானே, சர்ஃபராஸ் கான், சித்தேஷ் லாட் மற்றும் இந்தியா U19 கேப்டன் ஆயுஷ் மத்ரே போன்ற முக்கிய வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிரான முதல் போட்டி ஸ்ரீநகரில் அக்டோபர் 15 முதல் 18 வரை நடைபெறுகிறது.

Shardul Thakur to lead Mumbai in Ranji Trophy 2025-26 Season.

Indian T20I Captain Suryakumar Yadav is not part of the 16-member squad, which includes Shivam Dube

Mumbai start their compagin against J & K#RanjiTrophy#Mumbai #AFazenda#kripto #srchafreen pic.twitter.com/3559WaHsvG

— sports news (@CricUniverse7) October 11, 2025

ஷ்ரேயாஸ் ஐயரின் நிலை

மற்றொரு முக்கிய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர், முதுகுவலி பிரச்சனை காரணமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்து ஆறு மாத கால ஓய்வு எடுத்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் முதுகு பிடிப்பு ஏற்பட்டதால், தனது உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக இந்த ஓய்வை அவர் எடுத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவரும் ரஞ்சி அணியில் சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் சூர்யகுமார் யாதவ ரஞ்சி தொடக்க போட்டியில் இடம் பெறாததற்கு காரணம் அவரது பங்கேற்பு உறுதி செய்யப்படாததே தவிர, அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை என்று நமக்கு தெரிகிறது. தற்போது, இந்திய டி20 அணியின் கேப்டனாக, அவர் வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.