தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், போட்டி அட்டவணை மற்றும் பிற முக்கிய விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொடர், இந்திய அணியின் தலைமை பொறுப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. காரணம் சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ வென்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக, இளம் வீரர் ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்துவார்.
Add Zee News as a Preferred Source
அக்டோபர் 19 தொடக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் முழு பலத்துடன் இந்த தொடரில் களமிறங்க தயாராக உள்ளனர். அதே சமயம், ஆஸ்திரேலிய அணியும் தனது சிறந்த வீரர்களுடன் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இந்திய வீரர்களை கலாய்க்கும் விதமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர் என்ற கேள்வி கேட்க, அதற்கு பாட் கம்மின்ஸ், “இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர்” என்று தெரிவித்தார். “இருப்பினும் அவர்களின் திறமை நிரந்தரமானது, ஃபார்ம் என்பது தற்காலிகமானதுதான்” என்றும் தெரிவித்துள்ளார். இது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை குறித்து சொல்லப்பட்டதா என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேப்டன்களின் கீழ் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய ஒருநாள் அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய டி20 அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானோலி, பென் Dwarshuis, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
ஆஸ்திரேலிய டி20 அணி (முதல் இரண்டு போட்டிகளுக்கு)
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் Dwarshuis, நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
About the Author
RK Spark