பிஎஸ்எப் விமானப் பிரிவில் முதல் பெண் பொறியாளர் நியமனம்

புதுடெல்லி: எல்லை பாது​காப்பு படை​யின் விமானப் பிரி​வில் முதல் முறை​யாக பெண் பொறி​யாளர் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளார்.

எல்லை பாது​காப்பு படை​யில் (பிஎஸ்​எப்), உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செல்​படும் விமானப் பிரிவு கடந்த 1969-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வரு​கிறது. இந்த பிரி​வில் எம்ஐ 17, சீட்​டா, துருவ் ரக ஹெலி​காப்​டர்​கள், மற்​றும் விஐபிக்​.கள் பயணத்​துக்கு பயன்​படுத்​தப்​படும் எம்​பரர் ஜெட் விமான​மும் உள்​ளது.

இப்​பிரி​வில் விமான பொறி​யாளர்​களுக்கு பற்​றாக்​குறை நில​வியது. இதனால் 3 பிஎஸ்ப் அதி​காரி​களுக்கு விமான பொறி​யாளர் பயிற்​சியை முதலில் விமானப்​படை வழங்கி வந்​தது. சில காரணங்​களால் விமானப்​படை​யால் தொடர்ந்து பயிற்​சியை வழங்க முடிய​வில்​லை. இதனால் எல்லை பாது​காப்பு படையே, தங்​கள் அதி​காரி​களுக்கு விமான பொறி​யாள​ருக்​கான பயிற்​சியை அளிக்க உள்​துறை அமைச்​சகத்​தின் அனு​மதி பெறப்​பட்​டது.

இதையடுத்து எல்லை பாது​காப்பு படை​யின் பெண் இன்​ஸ்​பெக்​டர் பாவ்னா சவுத்​திரி மற்​றும் 4 ஆண் அதி​காரி​கள் விமானப் பிரி​வில் பொறி​யாளர் பயிற்​சிக்கு அனுப்​பப்​பட்​டனர். இவர்​கள் தங்​கள் பயிற்​சியை சமீபத்​தில் முடித்​தனர். இதையடுத்து இன்​ஸ்​பெக்​டர் பாவ்னா சவுத்​திரிக்கு விமானப்​பிரி​வில் பெண் பொறி​யாளர் பணி, வழங்​கப்​பட்​டது.

இதற்​கான சான்​றிதழை எல்லை பாது​காப்பு படை தலைமை இயக்​குநர் தல்​ஜித் சிங் சவுத்​ரி வழங்​கி​னார். உடன் பயிற்சி பெற்ற 4 ஆண் அதி​காரி​களுக்​கும் விமானப் பிரி​வில் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. எல்லை பாது​காப்பு படை​யின் 50 ஆண்டு கால வரலாற்​றில், வி​மானப் பிரி​வில் பெண் பொறி​யாளர் பணி​யாற்​று​வது இது​வே முதல்​ முறை ஆகும்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.