இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பொறுப்பில் சமீபத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் மூத்த கேப்டன் ரோஹித் சர்மாவை கழற்றிவிட்டு 23 வயதான சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் தங்களது இடத்தை இழந்துள்ளனர்.
Add Zee News as a Preferred Source
ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கம் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது விமர்சனங்கள் எழுந்தாலும், குறிப்பாக ஹர்ஷித் ராணாவுக்கு 3 விதமான கிரிக்கெட்டிலும் வாய்ப்பு கிடைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பெரிதாக இதுவரை எந்த போட்டியிலும் தன்னை நிரூபிக்காத அவருக்கு எப்படி வாய்ப்பளுக்கப்படுகிறது, மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரே காரணத்திற்காக அவருக்கு வாய்ப்பளிப்பதா? எனவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனகளை முன்வைத்தனர்.
அதேபோல் முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் ஹர்ஷித் ராணாவிற்கு தொடர்ந்து வாய்ப்பளித்ததற்கு விமர்சித்தனர். குறிப்பாக ஹர்ஷித் ராணா எதற்காக அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார்.இந்த நிலையில், ஹர்ஷித் ராணா குறித்த ஸ்ரீகாந்த்தின் விமர்சனத்திற்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
உங்களுடைய யூடியூப் சேனலின் நலனுக்காக ஒரு 23 வயது குழந்தையை டார்கெட் செய்வது நியாயமற்றது. ஹர்ஷித் ராணாவின் தந்தை ஒரு முன்னாள் வீரரோ அல்லது தலைவரோ அல்லது வெளிநாட்டவரோ கிடையாது. ராணா விளையாடிய கிரிக்கெட் அனைத்தும் அவரது சொந்த முயற்சியில் விளையாடினார். அப்படி இருக்கையில் அவரை குறிவைத்து விமர்சிப்பது சரியல்ல. வீரர்களின் செயல்திறனையோ, தேர்வாளர்களையோ, ஏன் பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் 23 வயது குழந்தையை நீங்கள் சமூக வலைத்தளத்தில் அப்படி பேசுவது நியாயமற்றது.
நீங்கள் என்னை விமர்சியுங்கள். அதை நான் எதிர்கொள்கிறேன். ஆனால் 23 வயது வீரரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் செயல்திறனை விமர்சனம் செய்யுங்கள்.தனிப்பட்ட வீரர்க்ளை விமர்சிக்காதீர்கள். இது ஹர்ஷித் ராணாவுக்கு மட்டும் அல்ல அனைத்து இளம் வீரர்களுக்கும் பொருந்தும் என அவர் கூறினார்.
About the Author
R Balaji