சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக். 16 – 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், தற்போது நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று […]
