எம்பிவி, EV, ஜெனிசிஸ் பிராண்டு அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாய் இந்தியா | Automobile Tamilan

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் மோட்டார் (HMIL) நிறுவனம் 2030 நிதி ஆண்டிற்கு முன்பாக 7 புதிய கார்கள் உட்பட மொத்தமாக 26 மாடல்களை வெளியிட உள்ளதை முதலீட்டாளர் தினத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

HMIL Invsestor Day

  • 2030 நிதியாண்டுக்குள் ஹூண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை விரிவுபடுத்தவும், 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் EV எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தவும் ₹45,000 கோடி ($5.4 பில்லியன்) முதலீட்டை அறிவித்துள்ளது.
  • நவம்பர் 4 ஆம் தேதி புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி மாடல் லெவல்-2 ADAS சார்ந்த பாதுகாப்புடன் வரவுள்ளது.
  • 26 கார்களில் 7 புதிய பிராண்டுகளை ஹூண்டாய் வெளியிட உள்ள நிலையில் இவற்றில், எம்பிவி, ஆஃப் ரோடு எஸ்யூவி மற்றும் இவி இடம்பெற்றிருக்கும்.
  • 2027 ஆம் ஆண்டு இந்தியாவிலே வடிவமைத்து தயாரிக்கப்பட உள்ள பிரத்தியேக எஸ்யூவி பட்ஜெட் விலையில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக துவங்குவதுடன், சிறப்பான பாதுகாப்பினை வழங்கவும், லெவல்-2 ADAS பெற்று ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரு விதமாக வரவுள்ளது.
  • எம்பிவி மாடலை 2026 மத்தியில் அல்லது இறுதியில் வெளியிட ஹூண்டாய் முடிவெடுத்துள்ளது.
  • கூடுதலாக. ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற எஸ்யூவி மாடலை குறிப்பாக மஹிந்திராவின் தார், ஜிம்னி எஸ்யூவிக்கு சவால் விடுக்கும் மாடலை கொண்டு வரவுள்ளது.
  • ஹூண்டாயின் ஆடம்பர கார் பிராண்டான ஜெனிசிஸ் இந்தியாவில் 2027 முதல் கிடைக்க உள்ளது.
  • 2030க்குள் தனது போர்ட்ஃபோலியோவில் 13 ICE, 5 EV , 8 HEV, மற்றும் 6 CNG மாடல்களை கொண்டு வரவுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியில் 30% ஏற்றுமதி பங்களிப்பை இலக்காகக் கொண்டுள்ளது.
  • HMIL ஆனது ஹூண்டாய் குழுமத்தின் இரண்டாவது ஏற்றுமதி மையமாக உருவெடுத்து வருகின்றது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.