இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது. இத்தொடரில் மூத்த வீரரகளான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அகியோர் இடம் பிடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயம் இவர்கள் இத்தொடருக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அஜித் அகர்கர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆஸ்திரேலியா தொடரில் 3 சதங்கள் அடித்தாலும், அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று உறுதி அளிக்க முடியாது என கூறி இருக்கிறது.
இது தொடர்பாக NDTTV நிகழ்ச்சி ஒன்றில் அஜித் அகர்கர் பேசினார். அவரிடம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ரோகித், கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அசைக்க முடியாத வீரர்களாக உள்ளனர். ஒருவர் 50க்கு மேல் சராசரியும் இன்னொருவர் 50க்கு அருகில் சராசரியை வைத்துள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் சோதனைக்கு உள்ளாக்க போவதில்லை என்று அஜித் அகர்கர் கூறினார்.
அவர்கள் தற்போது இந்திய அணியில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிலைமை என்னவாக இருக்கும் என்று சொல்வது கடினம். யாருக்குத் தெரியும், அந்த இடத்தைப் பிடிக்கும் இளைய வீரர்கள் இருக்கலாம்.அவர்கள் விளையாடத் தொடங்கியதும், நிலைமையை மதிப்பிடுவோம். இது வெறும் ரன்கள் அல்ல, கோப்பைகளை வெல்வது பற்றியது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் 3 சதங்கள் அடித்தாலும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று உறுதி அளிக்க முடியாது. சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என மேலும் கூறினார்.
முன்னதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து எந்த உறுதியையும் நாங்கள் அளிக்கவில்லை என்று இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. .
About the Author
R Balaji