பெர்த்,
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வீராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் ரோகித் சர்மா அதிக ரன் குவிப்பார். ஏனென்றால் அவர்களுக்கு இதுதான் கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருக்கும்.
ஆஸ்திரேலிய மண்ணில் தொடக்க வீரராக களமிறங்குவதை விட நடுவரிசையில் களமிறங்குவது தான் மிகவும் எளிது.ரோகித் சர்மா தொடகக வீரராக விளையாடுவார் என்பதால் இந்த தொடரில் வீராட் கோலி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. இத்தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும். இந்த தொடர் கடும் நெருக்கடியாக தான் அமையும். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பதால் நான் ஆஸ்திரேலியா வுக்கு தான் ஆதரவாக கணிப்பை வெளி யிடுவேன். இதை நான் பெரிய நம்பிக்கையாக சொல்லவில்லை. எனினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று எனது உள்ளுணர்வு. என தெரிவித்தார் .