டெல்லி,
எகிப்து வெளியுறவுத்துறை மந்திரி பதர் அப்துல்லாதி. இவர் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியா – எகிப்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடு உறவு, வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பதர் அப்துல்லாதி பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது , காசாவில் போர் நிறுத்தம், காசா அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர் எல் சிசிக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக பதர் அப்துல்லாதியிடம் பிரதமர் மோடி கூறினார். மேலும், இந்தியா – எகிப்து உறவு மேலும் வலிமையடைந்து மக்களுக்கும், மனிதத்திற்கும் பலன் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.