திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன், அன்றைய தினம் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 22 ஆம் தேதி (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபடுகிறார். இதையொட்டி, வரும் 21 ஆம் தேதி வரை […]
