அடுத்த 18 மாதத்தில் வந்தே பாரத் 4.0 ரயில்கள்: மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் ரயில்வே கண்​காட்சி தொடங்​கியது. இதில் 15 நாடு​களைச் சேர்ந்த 450 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன. இந்த கண்​காட்​சியை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தொடங்​கி​வைத்​து பேசி​ய​தாவது:

வந்தே பாரத் ரயி​லின் தரம், வேகம் தொடர்ந்து அதி​கரிக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது வந்தே பாரத் 3.0 ரயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த ரயில்​கள் 52 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்​டும் திறன் கொண்​டவை ஆகும். ஐப்​பான் மற்​றும் ஐரோப்​பிய நாடு​களின் ரயில்​களை ஒப்​பிடும்​போது வந்தே பாரத் ரயில்​கள் மிகச் சிறப்​பாக உள்​ளன. உலகம் முழு​வதும் இந்த ரயில்​களுக்கு மிகுந்த வரவேற்பு உள்​ளது.

அடுத்த 18 மாதங்​களில் வந்தே பாரத் 4.0 ரயில்​கள் தயாரிக்​கப்படும். இந்த ரயில்​கள் மணிக்கு 350 கி.மீ. வேகத்​தில் செல்​லும் திறன் கொண்​ட​வை​யாக இருக்​கும். எனினும் பாது​காப்பு கருதி 320 கி.மீ. வேகத்​தில் இந்த ரயில்​கள் இயக்​கப்​படும்.

கடந்த 11 ஆண்​டு​களில், 35,000 கி.மீ. தூரத்துக்கு புதிய தண்​ட​வாளங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 46,000 கி.மீ. மின்​மய​மாக்​கல் பணி​கள் நிறைவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் 7,000 கி.மீ. தொலை​வுக்கு சிறப்பு ரயில்வே வழித்​தடங்​கள் அமைக்​கப்​படும். இந்த வழித்​தடங்​களில் மணிக்கு 350 கி.மீ. வேகத்​தில் ரயில்​களை இயக்க முடி​யும். இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படும் ரயில் இன்​ஜின்​கள் பல நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன.

இந்​தி​யா​வில் தின​மும் 2 கோடிக்​கும் அதி​க​மானோர் ரயில்​களில் பயணம் செய்​கின்​றனர். சரக்கு ரயில் போக்​கு​வரத்​தில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது. புல்​லட் ரயில் திட்​டம் வேகம் பெற்​றிருக்​கிறது. அமிர்த பாரத் திட்​டத்​தில் நாடு முழு​வதும் 1,300-க்​கும் மேற்​பட்ட ரயில் நிலை​யங்​கள் புதுப்​பொலிவு பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.