பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சனா பர்வீன் (19 வயது). இவர் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து வந்தார். இதே கல்லூரியில் ரிபாஸ் என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். அவருடன் சனா பர்வீன் நட்பாக பழகி வந்துள்ளார். ஆனால் ரிபாஸ், சனா பர்வீனை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சனா பர்வீனுக்கு அவர் காதல் தொல்லை கொடுத்து, தகராறு செய்தார்.
இதனால் மனம் உடைந்த சனா பர்வீன், தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரிபாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.