ராவல்பிண்டி,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லாகூரில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது.
உள்ளூர் சூழலை சரியாக பயன்படுத்தி தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் பாகிஸ்தானும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் தென் ஆப்பிரிக்காவும் காத்திருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த டெஸ்ட் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.