பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று மாசுபாடும், பட்டாசு குப்பைகளும் அதிகமாகிக்கொண்டே போகிறது. தீபாவளியன்று இரவே தூய்மை பணியாளர்களும் பட்டாசுக் குப்பைகளை அகற்றத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த வருடமும் நேற்று தீபாவளி வெகு விமர்சையாகக் கொண்டாடி பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பெரிய அளவில் பேப்பர்களை ரோல் செய்து இருக்கும் பட்டாசுகளையே இளைஞர்கள் விரும்பி வாங்கி வெடித்தனர். இதனால் அதிக அளவு பட்டாசு குப்பைகள் சாலைகளில் காணப்பட்டது. மழையும் விட்டு விட்டு பெய்து வந்ததால் பட்டாசு குப்பைகள் எல்லாம் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாக்கடைகளில் தேங்கியது.

குப்பைகளை அகற்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

இதனால் நேற்று இரவிலிருந்தே தூய்மைப் பணியாளர்கள் பட்டாசுக் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். குப்பைகளை அகற்றும் பணியில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காகவும் மக்களுக்கு பட்டாசுக் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து இன்று காலை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தமும் குப்பைகளை அகற்றத் தொடங்கினார்.

இவருடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்து குப்பைகளை அகற்றத் தொடங்கினர். மணிக்கூண்டு கடைவீதி பகுதிகளில் கொட்டும் மழையிலும் பட்டாசு குப்பைகளை அகற்றும் வேலைகளில் ஈடுபட்டனர்.

குப்பைகளை அகற்றிய திண்டுக்கல் எம்பி

திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று மதியம் வரை சுமார் 150 டன் பட்டாசு குப்பைகள் தூய்மைப் பணியாளர்களால் அகற்றபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.