இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் தடுமாறிய இந்திய அணி படுதோல்வியை அடைந்தது. ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
நீண்ட இடைவேளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடியதால், அவர்கள் ரன்களை குவிப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தன. ஆனால் அவர் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றத்தையே கொடுத்தது. அதிலும் குறிப்பாக விராட் கோலி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இந்த சூழலில், அவர் அட்டிலெய்ட்டில் நாளை (அக்டோபர் 23) நடக்க இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது.
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியை எளிதில் வீழ்த்துவோம் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஆனால் விராட் கோலி சமீப காலமாக தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்து வலையில் ஆட்டமிழந்து வருகிறார். அதனால் ஜோஸ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் போன்ற பந்து வீச்சாளர்கள் அந்த பந்துகளை அவருக்கு அதிகம் வீசுவார்கள். எனவே அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.
இங்கு இந்திய அணிக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி போன்றவருக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடுவது நன்றாக இருக்கும். அவரை போல ஒரு வீரருடன் களத்தை பகிர்ந்து கொள்வது சிறப்பான ஒரு விஷயம் என தெரிவித்தார்.
ஒருநாள் தொடருக்கான இரு அணிகள்
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
About the Author
R Balaji