சென்னை: தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால், மாநகராட்சி – நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மழை கொட்டி வருகிறது. இதையடுத்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. பருவ மழையின்போது அரசுத் துறையினா் எந்த நேரமும் […]