Nothing Phone 3 Discount: நீங்கள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அமேசான் தளத்தில் சிறந்த மாற்று ம் அற்புதமான சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சுமார் 80,000 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் 3 (Nothing Phone 3) இப்போது மெகா தள்ளுபடியில் கிடைக்கிறது. பண்டிகை காலம் முடிந்த பிறகும் இந்தச் சலுகை தொடர்வதால், இந்த பிரீமியம் சாதனத்தை நடுத்தர விலை பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தச் சிறந்த வாய்ப்பை தவறவிடாமல், உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Add Zee News as a Preferred Source
நத்திங் போன் 3 (Nothing Phone 3): எவ்வளவு தள்ளுபடி?
நத்திங் போன் 3 தற்போது மின்வணிக தளமான அமேசான் தளத்தில் வெறும் ரூ.45,995க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் அறிமுக விலையில் ஏறக்குறைய 46% நிலையான தள்ளுபடியை வழங்குகிறது. அதுமட்டுமின்றி வங்கி சலுகைகள் மூலம் கூடுதல் சேமிப்புகளை வழங்குகின்றன. அதன்படி உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்டை இருந்தால், அதை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக ₹1,250 தள்ளுபடியை பெறலாம். இதனால் போனின் விலை சுமார் ரூ.44,745 ஆகக் குறையும்.
இந்த சிறப்பு தள்ளுடி இத்துடன் முடிவடையவில்லை.. அமேசான் நிறுவனம் ஒரு சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது, அங்கு உங்கள் பழைய போனுக்கு ஈடாக ரூ. 42,900 வரை மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருந்தால் இந்தச் சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். கூடுதலாக, நீங்கள் எந்த கட்டணமும் இல்லாத EMI விருப்பங்களைத் தேர்வுசெய்யலாம், இதன் மூலம் இந்த சக்திவாய்ந்த போனை மிக எளிதான தவணைகளில் வீட்டிற்குக் கொண்டு வரலாம்.
Nothing Phone 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்
இந்த போன் அதன் தள்ளுபடிகளுக்கு மட்டுமல்ல, அதன் விவரக்குறிப்புகளுக்கும் பெயர் பெற்றது.
டிஸ்ப்ளே மற்றும் ப்ரோடெக்ஷன்: இந்த சாதனம் HDR10+ ஐ ஆதரிக்கும் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz தகவமைப்பு புதுப்பிப்பு வீதத்தையும் 4,500 nits வரை உச்ச பிரகாசத்தையும் வழங்குகிறது. இதன் ஸ்கிரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பொருட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்ஃபோனின் ஸ்கிரீன் பாதுகாக்கப்பாக இருக்கும்.
இந்த போன் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் முதன்மை, பெரிஸ்கோப் மற்றும் அல்ட்ராவைடு லென்ஸுடன் கூடிய 50MP டிரிபிள்-லென்ஸ் பின்புற கேமரா உள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக சக்திவாய்ந்த 50MP முன் கேமராவும் கிடைக்கிறது. இந்த சாதனம் 65W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
About the Author
Vijaya Lakshmi