ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது அகமது. இவருடைய மனைவி அப்சா பேகம். இந்த தம்பதிக்கு சோயா பேகம் (10) முகமது தைமூர்(4) என்ற பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிறுவனம் மூலம் முகமது அகமது ரஷியா அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமை அனுபவித்து வருவதாக தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இது தொடர்பாக அப்ஷா பேகம் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதி உள்ளார். அதில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் எனது கணவரை கண்டுபிடித்து மீட்டு அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ரஷியாவில் இருப்பதாக செல்பி வீடியோ கூறப்படும் அகமது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:
தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில், ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
நான் இருக்கும் இடத்தில் ஒரு எல்லை, போர் நடந்து கொண்டிருக்கிறது. நான் உட்பட 4 இந்தியர்கள் போர் மண்டலத்திற்குள் செல்ல மறுத்துவிட்டோம்.
அவர்கள் எங்களை சண்டையிட மிரட்டினர், என்னையும் இன்னொருவரையும்’ நோக்கி ஆயுதத்தை நீட்டினர்.என் கழுத்தில் துப்பாக்கியை வைத்து, என்னைச் சுட்டு, டிரோன் மூலம் நான் கொல்லப்பட்டது போல் அரங்கேற்று வோம் என்கின்றனர்.
“என் காலில் பிளாஸ்டர்போடப்பட்டுள்ளது, நடக்க முடியவில்லை. என்னை இங்கு (ரஷியா) அனுப்பிய முகவரை தயவுசெய்து விட்டுவிடாதீர்கள். அவர் என்னை இவற்றில் சிக்க வைத்தார். வேலை இல்லாமல் 25 நாட்கள் இங்கே உட்கார வைத்தார். நான் வேலை கேட்டுக்கொண்டே இருந்தேன், ரஷியாவில் வேலைவாய்ப்பு என்ற போர்வை யில் நான் வலுக்கட்டாயமாக இதில் இழுக்கப் பட்டேன்,என்று வர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷியாவில் சிக்கியுள்ள அகமதுவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒவைசி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.