தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தனது பிக் பேங் விற்பனையை தொடங்கியது, கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை இன்று அதாவது அக்டோபர் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விற்பனையின் போது Samsung, Vivo, Realme மற்றும் Nothing போன்ற பிராண்டுகளின் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. நீங்கள் நடுத்தர பட்ஜெட் தொலைபேசியைத் தேடுகிறீர்களா அல்லது புதிய அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இதுவே சரியான வாய்ப்பு. உங்களுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்காகவோ ஒரு நல்ல, மலிவு விலையில் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், தாமதிக்காதீர்கள்.
Add Zee News as a Preferred Source
Samsung Galaxy S24 FE
இந்த தீபாவளி விற்பனையில் Samsung Galaxy S24 FE போன் ஒரிஜினல் விலையை விட சுமார் ரூ.30,000 குறைவாக கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.59,999 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.29,999க்கு மட்டுமே இந்த போன் கிடைக்கிறது. இது தவிர, வாங்கும் போது 5% கேஷ்பேக்கும் கிடைக்கும். அம்சத்தை பற்றி பேசுகையில் இந்த ஃபோன் 6.7-இன்ச் FHD+ AMOLED திரையைக் கொண்டுள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இது Exynos 2400e செயலியால் இயக்கப்படுகிறது மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பிடத்தை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரி மற்றும் 25W வேகமான சார்ஜிங் விருப்பத்தைக் கொண்டுள்ளது. இதன் பின்புறத்தில் 50MP + 12MP + 5MP டிரிபிள் கேமரா அமைப்பையும், செல்ஃபிக்களுக்கான 10MP கேமராவையும் கொண்டுள்ளது.
Vivo V50e 5G
விவோவின் இந்த நடுத்தர பட்ஜெட் போன் முதலில் ₹33,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது Flipkart விற்பனையின் போது ₹24,649க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வங்கி சலுகைகளுடன், இந்த ஸ்மார்ட்ஃபோனை ₹23,416க்கு வாங்கலாம். அம்சத்தை பற்றி பேசுகையில் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 7300 செயலி மூலம் இயக்கப்படுகிறது, 8GB RAM மற்றும் 256GB வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி 5,600mAh மற்றும் 44W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
Nothing Phone (3a)
இந்த நடுத்தர பட்ஜெட் போன் நத்திங் நிறுவனத்தின் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோன் ஆகும், தற்போது இந்த தீபாவளி விற்பனையின் போது, இதன் விலை ₹3,000 குறைக்கப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளுடன், இதை ₹21,999க்கு வாங்கலாம். இந்த போன் 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் அதன் ஈர்க்கக்கூடிய வடிவமைப்பு மற்றும் நல்ல கேமரா அம்சங்களுக்கு பெயர் பெற்றது.
Realme 15 Pro
இந்த விற்பனையில் Realme 15 Pro வெறும் ₹28,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 12GB RAM மற்றும் 256GB சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் 50MP இரட்டை கேமரா மற்றும் 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது Qualcomm Snapdragon 7 Gen 4 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு பெரிய 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
About the Author
Vijaya Lakshmi