லண்டன்: சிறுவர்களுக்கான கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு, அடுத்தாண்டு முதல் தொடங்கப்படுவதாக புக்கர் பரிசு அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்படும் சிறந்த புனைக் கதை புத்தகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் புக்கர் பரிசு என்ற இலக்கிய விருது வழங்கப்படு
கிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் 8 முதல் 12 வயது சிறுவர்களுக்கான கதை புத்தகத்துக்கும் புக்கர் பரிசு வழங்க புக்கர் பரிசு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த கதை புத்தகத்தை குழந்தைகளும் அடங்கிய நடுவர் குழு தேர்வு செய்யும். இதற்கு அடுத்தாண்டு முதல் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் சிறுவர் கதை புத்தகத்துக்கு 2027-ம் ஆண்டிலிருந்து புக்கர் பரிசு வழங்கப்படும். இந்தப் புத்தகம் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.