IND vs SA: சுப்மன் கில் இல்லை! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய A மற்றும் தென்னாப்பிரிக்கா A அணிகளுக்கு இடையேயான தொடரை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரின் கவனமும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி தேர்வின் மீது திரும்பியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், காயத்தில் இருந்து மீண்டு வரும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரின் மூலம் மீண்டும் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

மீண்டும் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்?

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியா A அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய A அணியை அவரே வழிநடத்தினார். எனவே, இந்த தொடரிலும் கேப்டன் பொறுப்பு அவருக்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அவரது தலைமை பண்பை மேலும் மெருகேற்ற ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

ஹர்திக் பாண்டியாவின் கம்பேக்!

ஆசிய கோப்பை இறுதி போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முழுத் தொடரையும் காயம் காரணமாக தவறவிட்ட ஹர்திக் பாண்டியா, இந்த தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த்திற்கு போட்டி அனுபவம் கொடுப்பதை போலவே, ஹர்திக் பாண்டியாவுக்கும் இந்த தொடர் ஒரு சிறந்த பயிற்சி ஆட்டமாக அமையும் என பிசிசிஐ கருதுகிறது.

ரோஹித், கோலிக்கு இடமில்லையா?

தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இளம் வீரர்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்துவதே A தொடர்களின் முக்கிய நோக்கம் என்பதால், மூத்த வீரர்கள் இருவரையும் இதில் விளையாட வைப்பது ஆச்சரியமாகவே இருக்கும். ஆஸ்திரேலியா A தொடரிலும் அவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஒருநாள் தொடர் நவம்பர் 13, 16, 19 ராஜ்கோட்டில் நடைபெறும் அதே வேளையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதனால், சுப்மன் கில் தலைமையிலான டெஸ்ட் அணியில் உள்ள வீரர்கள் யாரும் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.

இளம் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

ஆஸ்திரேலியா A தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, ரியான் பராக், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு தங்களை மீண்டும் நிரூபிக்க இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் சதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யாவுக்கும் இந்த தொடரில் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம்.

தென்னாப்பிரிக்கா A அணிக்கு எதிரான உத்தேச இந்திய A அணி

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, ரியான் பராக், ஆயுஷ் பதோனி, விப்ரஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.