ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06091), மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஆந்திர மாநிலம் குண்டக்கல் சென்றடையும். மறுமார்க்கமாக, குண்டக்கலில் இருந்து நவ.20, 22 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06092), மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
அதேபோல, திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து நவ.19, 21 ஆகிய தேதிகளில் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06093), மறுநாள் காலை 11 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து நவ.20, 22 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06094), மறுநாள் பிற்பகல் 3.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் அடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (அக்.26) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.