பெங்களூரு: கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதுகுறித்து சித்தராமை யாவின் மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா, “எனது தந்தை தற்போது அரசியலில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையேற்று நடத்தினால் நல்லது” என தெரிவித்தார். இதற்கு டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “எனது மகன் யதீந்திரா கொள்கை ரீதியாக சதீஷ் ஜார்கிஹோளியின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அடுத்த முதல்வர் யார் என்பதற்கான பதிலாக அதனை கருதக்கூடாது” என்றார்.
இந்நிலையில் யதீந்திரா விடுத்துள்ள அறிக்கையில், “எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனது பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பினால் உரிய விளக்கம் அளிப்பேன். எனது தந்தை சித்தராமையா 2028-ம் ஆண்டு வரை முதல்வராக நீடிப்பார்” என்றார்.