ஆந்திராவில் ஆம்னி பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம்: போலி சான்றிதழ் மூலம் உரிமம் பெற்ற ஓட்டுநர்

ஹைதராபாத்: ஆந்​தி​ரா​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை அதி​காலை ஆம்னி பேருந்து தீப்​பிடித்து எரிந்ததில் 20 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்​னூல் காவல்​ துறை உயர் அதிகாரி விக்​ராந்த் பாட்​டீல் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த விபத்​துக்கு காரண​மான பேருந்து ஓட்​டுநர் மிரி​யாலா லட்​சுமய்யா கைது செய்​யப்​பட்​டுள்​ளார். 5-ம் வகுப்பு வரை மட்​டுமே படித்த அவர் போலி​யாக 10-ம் வகுப்பு சான்​றிதழை தயார் செய்து கனரக வாகன ஓட்​டுநர் உரிமத்தை பெற்​றுள்​ளதை புல​னாய்வு அதி​காரி​கள் கண்​டறிந்​துள்​ளனர். விதி​களின்​படி, வாக​னம் ஓட்​டு​பவர்​கள் 8-ம் வகுப்பு வரை படித்​திருக்க வேண்​டும். பெரும்​பாலும் இந்த விதி​கள் மீறப்​படு​கின்​றன.

மேலும், இந்த விபத்து ஏற்​படு​வதற்கு முக்​கிய காரண​மாக இருந்த பைக்​கில் வந்த இரண்டு பேர் சங்​கர் மற்​றும் சாமி குடிபோதை​யில் இருந்​ததை தடய​வியல் அதி​காரி​கள் உறு​திப்​படுத்தி உள்​ளனர். இரவு முழு​வதும் மது அருந்​திய அவர்​கள் அதி​காலை 2 மணி அளவில் பைக்​கில் வீடு திரும்​பி​யுள்​ளனர். பைக்​கில் பெட்​ரோலை நிரப்​பி​விட்டு சாலைபக்​கம் திரும்​பியபோது​தான் இந்த விபத்து நடை​பெற்​றுள்​ளது.

குடிபோதை​யில் வாக​னத்தை இயக்​கி​னால் எந்த அளவுக்கு பாதிப்பு இருக்​கும் என்​பதற்கு இந்த சம்​பவம் ஓர் உதா​ரணம். உண்​மை​யில் இது ஒரு விபத்து அல்ல. தடுக்​கக்​கூடிய படு​கொலை. குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டும் பொறுப்​பற்ற நபரின் செய​லால் வந்த வினை. இது​போன்​றவர்​களுக்கு கருணை காட்​டக்​கூ​டாது. இவ்​வாறு விக்​ராந்த்​ பாட்​டீல்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.