சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக விஜய் கண்ணீருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், செலவினங்களை ஏற்பதாகவும், உரியவர்களுக்கு பணி கிடைக்க உதவுவது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 27ஆம் தேதி ‘ அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். […]