ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஜிம்பாப்வே வென்றது. தொடர்ந்து இரு அணிகளுக்குமான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடந்து வருகிறது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்த போடியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.
இதில் குர்பாஸ் 39 ரன்னிலும், ஜட்ரான் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த செடிகுல்லா அடல் 25 ரன்னிலும், ஓமர்சாய் 27 ரன்னிலும், டார்விஷ் ரசூலி மற்றும் முகமது நபி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து ஷகிடிகுல்லா கமல் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 52 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்பே ஆட உள்ளது.