வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்!

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்க நிர்​வாகி கொலை வழக்​கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசா​ரித்து தண்​டனை பெற்​றுத் தந்த அரசு வழக்​கறிஞர் மற்​றும் போலீ​ஸாரை, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பாராட்​டி​னார்.

மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்கநகர செய​லா​ள​ராக இருந்​தவர் கொத்​தத் தெருவை சேர்ந்த கண்​ணன் (27). இவர் மீது பல்​வேறு வழக்​கு​கள் இருந்​தன. கடந்த 2021 நவம்​பர் மாதம் ஓர் உணவகத்​தில் சாப்​பிடும்​போது மோதல் ஏற்​பட்​ட​தில், கலைஞர் குடி​யிருப்பை சேர்ந்த மின்​வாரிய ஊழியர் கதிர​வன் என்​பவரை கண்​ணன் தாக்​கி​யுள்​ளார். கதிர​வன் அளித்த புகாரின்​பேரில், மயி​லாடு​துறை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து,கண்​ணனை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். அவர் மீது குண்​டர் தடுப்பு சட்​டத்​தின்​கீழ் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் சிறை​யில் இருந்து கண்​ணன் விடுவிக்​கப்​பட்​டார். ஆக.17-ம் தேதி இரவு மயி​லாடு​துறை புதிய பேருந்து நிலை​யம் அருகே நின்​றிருந்த கண்​ணனை, அங்கு வந்த கும்​பல் கொடூர​மாக வெட்​டிக் கொலை செய்​தது. இதுதொடர்​பாக மயி​லாடு​துறை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, கதிர​வன் உட்பட 22 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். பின்​னர் அனை​வரும் ஜாமீனில் வெளியே வந்​தனர்.

பின்​னர், வழக்​கில் தொடர்​புடைய 22 பேரில் ஒரு​வ​ரான கலைஞர் குடி​யிருப்பை சேர்ந்த அஜித்​கு​மார் 2024 மார்ச் 20-ம் தேதி வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இதுதொடர்​பாக கண்​ணனின் சகோ​தரர் மில்கி என்​கிற சந்​திரமோகன் உட்பட 11 பேர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இதில், கண்​ணன் கொலை வழக்கு விசா​ரணை, மயி​லாடு​துறை மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. வழக்கு விசா​ரணை முடிவடைந்த நிலை​யில் நேற்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

இதில், குற்​றம்​சாட்​டப்​பட்ட கதிர​வன் (41), தேவா (எ) மகாதேவன் (30), சேது (26), சந்​தோஷ் (21), திவாகர் (26), கார்த்​திக் (30), சுபாஷ் சந்​திர​போஸ் (29), ஹரிஷ் (25), பிரித்​தி​வி​ராஜ் (31) ஆகிய 9 பேருக்​கும் ஆயுள் சிறை தண்​டனை மற்​றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்​தி​யமூர்த்தி தீர்ப்பு வழங்​கி​னார். 12 பேர் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

போலீஸாருக்கு பாராட்டு: இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் ராம சேயோன் ஆஜரா​னார். வழக்கை விரைந்து விசா​ரித்து தண்​டனை பெற்​றுத் தந்த அரசு வழக்​கறிஞர் மற்​றும் போலீ​ஸாரை, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஸ்டா​லின் பாராட்​டி​னார். வழக்​கில் 31 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்ட நிலை​யில், அதில் கிராம நிர்​வாக அலு​வலர் ஒரு​வர் பிறழ் சாட்சி அளித்​த​தாக​வும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்​சி​யரிடம் கடிதம் வழங்க உள்​ள​தாக​வும் அரசு வழக்​கறிஞர் தெரி​வித்​தார். தண்​டனை பெற்ற 9 பேரும் பலத்த போலீஸ்பாது​காப்​புடன் கடலூர் மத்​திய சிறைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

ஆம்​புலன்​சில் தீர்ப்பு விவரம்: வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட பிர​பாகரன் என்​பவர் உடல்​நலக் குறை​வால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலை​யில், தீர்ப்​பையொட்டி ஆம்​புலன்ஸ் வாக​னத்​தில் நீதி​மன்​றத்​துக்கு நேற்று அழைத்து வரப்​ப​டார். இதையறிந்த நீதிபதி சத்​தி​யமூர்த்​தி, வழக்கு விசா​ரணை நடை​பெற்ற முதல் தளத்​தில் இருந்து இறங்கி வந்​து,ஆம்​புலன்ஸ் வாக​னத்​தில் இருந்த பிர​பாகரனிடம், ‘‘உங்​கள் மீதான குற்​றச்​சாட்டு நிரூபிக்​கப்​பட​வில்​லை. அதனால், விடு​தலை செய்​யப்​படு​கிறீர்​கள்’’ என்று தெரி​வித்​தார்.

இந்த கொலை வழக்​கில் தொடர்​புடைய இரு தரப்​பினரும் ‘ஜெய்​பீம்’ திரைப்​படம் தொடர்​பாக முன்​வைத்த விமர்​சனங்​களும் அவர்​கள் இடையே முன்​விரோதம் ஆழமாவதற்கு ஒரு காரண​மாக இருந்​துள்​ளது என தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.