அமராவதி: ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (ஒருங்கிணைந்த ஆந்திரா) தனக்கு சொந்தமான அம்பாஸிடர் காரில்தான் (பதிவு எண் AP 09 G 393) பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த காரை அவர் இப்போது பயன்படுத்துவதில்லை. அவருடைய ஹைதராபாத் வீட்டில் உள்ள அந்தக் காரை நன்கு பராமரித்து வந்தனர். தற்போது மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில், அமராவதியில் குடியேறினார் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில், அந்த அம்பாஸிடர் கார் ஹைதராபாத்தில் இருந்து அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த கார் அமராவதி வந்ததும், அதனுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
‘இவன் என் பழைய நண்பன், பல ஆண்டுகள் இது என்னுடன் பயணம் செய்துள்ளது. பல நிகழ்வுகளை இது பார்த்துள்ளது. பல கார்கள் வந்தாலும், இது தான் என்னுடைய விருப்பமான நண்பன்’ என அந்த காரின் நினவுகளை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சந்திரபாபு நாயுடு.