தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் | Automobile Tamilan

மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ நிறுவனத்தின் புதிய தண்டர்போல்ட் அட்வென்ச்சர் மாடல் EICMA 2025ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் இல்லை., இதன் யெஸ்டி அட்வென்ச்சர் ஏற்கனவே விற்பனையில் உள்ளது.

BSA Thunderbolt

பான்டம் என்ற மாடலில் ஏற்கனவே பிஎஸ்ஏ 334சிசி என்ஜினை கொண்டு வந்திருந்த நிலையில் தற்பொழுது தண்டர்போல்டிலும் 334சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின்  29.20bhp மற்றும் 29.6Nm டார்க்கை உருவாக்குகிறது. இது ஆறு வேக கியர்பாக்ஸுடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்க்குறைய சந்தையில் உள்ள யெஸ்டி அட்வென்ச்சரை தழுவியதாக அமைந்துள்ள தண்டர்போல்டின் பெரும்பாலான வடிவமைப்பு அமைந்துள்ள நிலையில், இரட்டை பிரிவில் வலதுபுறத்தில் ரிஃபெலக்டர், அடுத்து புராஜெக்டர் LED ஹெட்லைட் ஆனது இடதுபுறத்தில் இடம்பெற்று பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டெயில் லைட் இரண்டு பிரிவாக வழங்கப்பட்டுள்ளது.

bsa thunderbolt side 1bsa thunderbolt side 1

அதே நேரத்தில், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த ஏபிஎஸ் மேம்பாட்டில் Road, Rain மற்றும் Off-Road என மூன்று மோடுகளுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் பெரிய மாற்றமில்லாமல் 220மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று ஆனால் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் சரிசெய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

சில மாற்றங்களில், அட்ஜெஸ்டபிள் முன்பக்க விண்ட்ஸ்கிரீன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், புளூடூத் கனெக்டிவிட்டி, மற்றும் USB சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளை வழங்குகிறது.
குறைந்த இருக்கை உயரம், மேலும், பின்புற லக்கேஜ் ரேக் மற்றும் ரேலி-ஸ்டைல் ​​பீக் வடிவமைப்பு ரேலி தோற்றத்தை அளிக்கிறது.

பி.எஸ்.ஏ நிறுவனத்தின் Gold Star 650, Bantam 350, மற்றும் Scrambler 650 ஆகிய மாடல்களின் மரபை தொடரும் வகையில், Thunderbolt உலகளாவிய அட்வென்ச்சர் பைக்கிங் துறையில் புதிய நிலையை அமைக்க உள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.