பைசலாபாத்,
பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் பைசலாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகீன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டி காக் 63 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது, நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 264 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் 49.4 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 264 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சல்மான் ஆகா 62 ரன் எடுத்தார்.