எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம் | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் தனிநபர் மொபிலிட்டி சார்ந்த தேவைகளின் எதிர்கால மாடலாக நோவஸ் சீரிஸ் NEX 1, NEX 2, NEX 3 என மூன்று கான்செப்ட்களை EICMA 2025 கண்காட்சில் காட்சிப்படுத்தியுள்ளது.

Hero Vida Novus series

“VIDA Novus” எனும் புதிய மின்சார வாகன வரிசையை அறிமுகப்படுத்தியுள்ள ஹீரோ மோட்டோகார்ப் இதனை “Life is Movement” என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு, மனிதர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற நுண்ணறிவு சார்ந்த ஒரு புதிய இயக்கத்தின் தொடக்கம் என குறிப்பிடுகின்றது.

ஹீரோ விடா நோவஸ் NEX 1 என்ற கான்செப்ட் ஆனது முழுமையாக புதிய மொபிலிட்டி அனுபவத்தை வழங்கும் நோக்கில் தனிப்பட்ட நபர்கள் இலகுவாக குறைந்த தொலைவுகளுக்கு அல்லது தொழிற்சாலைகளுக்குள் பயணிக்க எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மின்சார சாதனம் ஆக  இதனை ஹீரோ எளிமையாக உங்களைச் சுமப்பதற்காக அல்ல, உங்களுடன் சேர்ந்து நகர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

hero vida novus NEX 1 personalhero vida novus NEX 1 personal

விடா NEX 2 என்ற இரண்டாவது கான்செப்ட் மூன்று சக்கரங்களை கொண்ட தன்னை தானே நிறுத்திக் கொள்ளும் வகையிலான Self-Balancing மின்சார டிரைக் மாடலாகும், முன்பாக இது போன்ற கான்செப்ட்டை விடாவில் காட்சிப்படுத்தியிருந்தது. இது மோட்டார் சைக்கிளின் சாகச உணர்வையும், மூன்று சக்கரத்தின் நிலைத்தன்மையையும் இணைக்கும் புதிய வகை வாகனம்.

hero vida novus NEX2 Trikehero vida novus NEX2 Trike

இறுதியாக இது தனிநபர்களுக்கான ஒரு நவீன விடா NEX 3 கான்செப்ட் ஆகும், இது கார் போன்ற தோற்ற வடிவமைப்பினை கொண்ட மிகச் சிறிய அளவிலான எல்லா காலநிலைக்கும் பொருந்தக்கூடிய, அழகிய தனிநபருக்கான மின்சார வாகனம். நான்கு சக்கர பாதுகாப்புடன், நகரம் முதல் கிராமம் வரை பயணிக்கத் தகுந்த சுகமான மற்றும் நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

hero vida novus NEX 3 urbanhero vida novus NEX 3 urban

இந்த நோவஸ் சீரிஸ் கான்செப்ட் நிலைகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கான ஒரு சாட்சியாக அமைந்துள்ள நிலையில், எப்பொழுது விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.