வெலிங்டன்,
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல். இவர் அரசு முறை பயணமாக இன்று நியூசிலாந்து சென்றுள்ளார்.
வெலிங்டன் சென்ற பியூஷ் கோயலை நியூசிலாந்து வர்த்தக மந்திரி டெட் மெக்கிலே வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்தியா , நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை, இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து டெட் மெக்கிலே உடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின்போது நியூசிலாந்து தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுக்க உள்ளார்.
Related Tags :