India vs Australia T20: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த சூழலில், இத்தொடரின் நான்காவது போட்டி இன்று (நவம்பர் 06) நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முன்னிலை பெறும் என்பதால், மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
முன்னதாக இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அணியில் அர்ஷ்தீப் சிங்கை எடுக்காதது மிகப்பெரிய விமரசனங்களை ஏற்படுத்தியது. இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரரை பெஞ்சில் அமர வைப்பது சரியல்ல என கெளதம் கம்பீரை ரசிகர்கள் கடுமையாக சாடினர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் அணியில் நுழைந்த அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றி அப்போட்டியில் அட்டநாயகன் என்ற விருதையும் பெற்றார். இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் தான் ஒரு சாம்பியன் வீரர் என்றதை பயிற்சியாளருக்கு நிருபித்தார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் நான்காவது போட்டியில் அவர் இந்திய அணியின் பிளேயிங் 11ல் இருப்பாரா அல்லது பெஞ்சல் அமர வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது திறமையானவர்கள் யார் என்பதை கண்டறியவே என கூறி உள்ளார் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல். இது தொடர்பாக பேசிய அவர், எப்போதும் வீரர்கள் தேர்வில் ஏமாற்றம் இருக்கும். ஒரு சில நேரங்களில் உங்களால் அதை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு வீரரையும் வாய்ப்பு கிடைக்கும்போது, சிறப்பாக செயல்பட கடினமாக உழைக்க கேட்டுக்கொள்வோம்.
2026 டி20 உலகக் கோப்பக்கு முன்பாக குறைந்த போட்டிகளே உள்ளன. அதற்கு முன்பாக எங்கள் வீரர்கள் அழுத்தமான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது முக்கியம். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், அவர்களின் திறமை என்னவென்று எங்களுக்கு தெரியமலேயே போய்விடும். அணியில் எந்த மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், எங்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். இவ்வாறு மோர்னே மார்க்கல் விளக்கம் அளித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.
About the Author
R Balaji